பாலும் சாணியும் (நல்லதும் கெட்டதும்)

ஒரு ஊரில் ஒரு ஆச்சிரமத்தில் ஒரு குருவிடம் நான்கு சீடர்களும் கற்று வருகின்றனர். அங்கே குரு கற்பிக்கும் வேளையில் ஒரு சீடன் எழுந்து நின்று குருவிடம் கேட்கிறான் "குருவே கடவுள் நல்லவற்றையும் படைத்துள்ளார் தீயவற்றையும் படைத்துள்ளார் நாம் ஏன் நல்லவற்றை விட்டுவிட்டு தீயவற்றை செய்யக்கூடாது." அதற்கு அந்த குரு சிரித்துவிட்டு அமைதியாக இருக்கிறார். மாலை நேரம் வருகிறது சமையல்காரன் அனைவருக்கும் பால் எடுத்து வருகிறார். குருவுக்கு பாலினை கொடுத்து விட்டு சீடர்களில் அந்த நல்லது தீயது கேள்வி கேட்டவனுக்கு கொடுக்க போகும் வேளை குரு தடுத்து நிறுத்தி "அவனுக்கு பால் வேண்டாம் சாணியினை கரைத்துக் கொடுங்கள்" என்கிறார். உடனே கோபமுற்ற சீடன் எழுந்து நின்று குருவிடம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறான். அதற்கு அந்த குரு சிரித்துவிட்டு நீ காலை என்ன சொன்னாய் அதைத்தான் நான் உனக்கு சொன்னேன். நன்றாக யோசித்துப் பார் பசு பாலும் தருகிறது சாணியும் தருகிறது. ஏன் நாம் பாலை விட்டு விட்டு சாணியை கரைத்து அருந்தக்கூடாது. என்கிறார். "கடவுள் நல்லவற்றையும் படைத்துள்ளார் தீயவற்றையும் படைத்துள்ளார் ஆனால் நாம் நல்லவற்றை நாடுதலே நமக்கு ஆரோக்கியமானதாகும்."   -  Writer எழுத்தாளர் தெரியவில்லை 

Comments

Post a Comment